குபேரன் இத்தலத்து இறைவனை வழிபட்டு மீண்டும் சங்கநிதி, பதுமநிதி ஆகியவற்றைப் பெற்றதால் இத்தலம் 'செம்பொன் பள்ளி' என்று அழைக்கப்படுகிறது. மூலவரும் 'சொர்ணபுரீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர் 'சொர்ணபுரீஸ்வரர்', 'செம்பொன்பள்ளியார்' என்னும் திருநாமங்களுடன், அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'மருவார் குழலியம்மை' என்னும் திருநாமத்துடன், இரண்டு கரங்களுடன் தரிசனம் தருகின்றாள். இங்கு மூலவர் கிழக்கு திசை நோக்கியும், அம்பாள் மேற்கு திசை நோக்கியும் காட்சி தருகின்றனர்.
கோயில் பிரகாரத்தில் உள்ள முருகப் பெருமான் தனது கையில் வஜ்ராயுதம், அட்சய மாலை ஆகியவற்றுடன், வள்ளி, தேவசேனை இல்லாமல் காட்சி தருகின்றார். விநாயகர், ஜேஸ்டாதேவி ஆகியோரும் தரிசனம் தருகின்றனர்.
சித்திரை மாதம் 7 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை சூரியனின் கதிர்கள் மூலவர் மீது படும் சூரிய பூஜை நடைபெறுகிறது.
வீரபத்திரர், முருகப் பெருமான், திருமால், லட்சுமி, இந்திரன், குபேரன், சிபி, சூரியன் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.
கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்று.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|